Editorial / 2021 நவம்பர் 23 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமியை 7 மாத கர்ப்பிணியாக்கிய ஒரு பிள்ளையின் தந்தையான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.
அச்சிறுமியின் சகோதரி மற்றும் தாயாரை, நேற்று (22) கைது செய்துள்ளதாக திருக்கோவில்பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த தெரிவித்தார்.
சிறுமியின் சகோதரியின் கணவனான 31 வயது நபரே தலைமறைவாகியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சிறுவர் பிரிவு பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
தலைமறைவாகிய நபரை தேடி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெரும் குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ். சமந்த தெரிவித்தார்.
அதேவேளை, சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள உடந்தையாக இருந்த சிறுமியின் 54 வயது தாயார் மற்றும் சிறுமியின் 24 வயது சகோதரி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்துள்ளனர்.
19 Feb 2026
19 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Feb 2026
19 Feb 2026