Freelancer / 2021 ஜூலை 31 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரமேஷ் ஆறுமுகம்
கந்தப்பளையில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
(32) வயதுடைய கந்தப்பளையைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கந்தப்பளை பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார அதிகாரி W.அமில தெரிவித்தார்.
இந்த சம்பவம் நேற்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.
வீட்டில் ஏற்பட்ட குடும்ப சண்டை காரணமாக குறித்த நபர் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இதன்போது, உயிருக்கு போராடிய இவரை உறவினர்கள் வாகனம் ஒன்றில் ஏற்றி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, வழியிலேயே உயிர் பிரிந்துள்ளது.
இதையடுத்து வைத்தியசாலையில் இவரது உடலை பரிசோதித்த வைத்தியர்கள் கொரோனா பரிசோதணையை நடத்தியுள்ளனர்.
அதில் இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் இளைஞரின் உடலை வைத்தியசாலைக்கு கொண்டுவந்த வாகன சாரதி உள்ளிட்ட உறவினர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என பொது சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார். R
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago