2023 ஜூன் 10, சனிக்கிழமை

கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Freelancer   / 2023 மார்ச் 31 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

ஒரு கிலோகிராம் கேரளா கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற நபரை, கல்முனை  விசேட அதிரடிப்படையினர் நேற்றிரவு (30) கைது செய்தனர்.

விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கமைய, கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், கல்முனை பகுதியை சேர்ந்த  45 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், மேற்குறித்த கேரளா கஞ்சா போதைப்பொருளை கடத்தி செல்வதற்காக தயாராக இருந்த வேளை, சாய்ந்தமருது இலங்கை வங்கிக்கு முன்பாக  வைத்து சந்தேகநபர் கைதானார்.
 
சந்தேக நபரிடம் இருந்து  யைடக்கத் தொலைபேசி,  1 கிலோகிராம் பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சா, ஒரு தொகை பணம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.

நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த குறித்த சந்தேகநபரை, விசேட அதிரடிப்படையினர் மாறுவேடத்தில் சென்று, நீண்ட போராட்டத்தின் பின்னர் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .