Ilango Bharathy / 2021 டிசெம்பர் 01 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 30 ஆம் திகதி டுவிட்டர் இணையதளத்தில் புதிய தலைமை செயற்பாட்டு அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த பாரக் அக்ரவால் என்பவர் பதவி ஏற்றார்.
இந்நிலையில் அவர் பதவியேற்ற முதல் நாளே ஒரு அதிரடியான அறிவிப்பொன்றையும் வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிவிப்பில் ” தனிப்பட்ட நபர்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவர்களுடைய அனுமதி இன்றி பதிவு செய்யக் கூடாது என்றும், அவ்வாறு பதிவு செய்யும் டுவிட்டர் கணக்குகளை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ”தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே இந்நிபந்தனையை விதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்த நிலையில் தற்போது பதவி ஏற்றவுடன் முதல் நடவடிக்கையாக இதனை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
18 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
7 hours ago