2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

மஜ்மா நகரில் 3003 உடல்கள் புதைப்பு

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கொரோனாத் தொற்றினால் மரணித்தவர்களை  நல்லடக்கம் செய்யும் ஓட்டமாவடி – மஜ்மா நகர் மயானத்தில்  11 உடல்கள் நேற்று (25)  நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்ட மொத்த உடல்களின் எண்ணிக்கை 3003 ஆக அதிகரித்துள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த மாதத்தை ஒப்பிடும்போது இம்மாதம் குறைந்த அளவிலான உடல்களே அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டிலுள்ள அனைத்து இன மக்களின் உடல்களுடன் மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளின் உடல்களும் அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .