2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

புதிய பிரதம செயலாளர் நியமிப்பு

Freelancer   / 2023 மே 04 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட திருமதி தமயந்தி பரணகம இன்று காலை 10.12 மணியளவில் சுப வேளையில் மாகாண சபையின் பிரதம செயலாளர் காரியாலயத்தின் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

பதுளை மாவட்டச் செயலாளராக ஐந்து வருடங்கள் கடமையாற்றிய அவர், ஊவா மாகாண சபையின் 8ஆவது பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை ஊவா மாகாண சபையின் முதலாவது பெண் பிரதம செயலாளரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாண சபையின் பிரதம செயலாளராகக் கடமையாற்றிய பி.பி.விஜயரத்ன நேற்றுடன் ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்குப் பிரதம செயலாளர் பதவிக்குத் திருமதி தமயந்தி பரணகம ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந் நிகழ்வில் ஊவா மாகாண ஆளுனர் ஏ.ஜே.எம். முஸாமில், இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தசநாயக்க ,தேனுக்க‌ விதானகமகே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X