2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

சின்ன ரயில் ஓடுகிறது

Freelancer   / 2023 மார்ச் 31 , மு.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்

நுவரெலியா விக்டோரியா பூங்காவில் சிறுவர் விளையாட்டு திடலில் உள்ள சின்ன ரயில், நேற்று (30) முதல் ஓடுகின்றது. அதனை, நுவரெலியா மாநகர சபையின் ஆணையாளர் சுஜீவ போதிமான்ன ஆரம்பித்து வைத்தார்.

ரயிலை பராமரிப்பதில் ஏற்பட்டிருந்த செலவு காரணமாக, அந்த ரயில் நீண்நாட்களாக ஓடவில்லை. எனினும் ஆணையாளரின் தலையீட்டால் திருத்தப்பட்ட அந்த ரயில், நுவரெலியா வசந்த காலத்தை முன்னிட்டு ஓடவுள்ளது.

நுவரெலியாவுக்கு வருகைதரும் உள்ளூர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பிள்ளைகள், இந்த சிறுவர் பூங்காவில் சுமார் 1 கிலோமீற்றர் பயணம் செய்ய முடியும் அதற்காக ஒருவரிடமிருந்து 100 ரூபாய் மாத்திரமே அறவிடப்படுகின்றது.

2023 ஆம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்த காலம், ஏப்ரல் 1ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலும் இடம்பெறும்.

   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .