Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.K.M. Ramzy / 2021 செப்டெம்பர் 19 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஞ்சாப்
மூன்றாவது முறையாக தான் அவமானப்படுத்தப்பட்டதாக பஞ்சாப் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்த அமரீந்தர் சிங் வேதனையுடன் தெரிவித்தார்.
பஞ்சாப் மாறோசக்கார பஞ்சாப் முதலமைச்சர் நில முதலமைச்சராக இருந்தார் அமரீந்தர் சிங் தனது இராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்திடம் அளித்தார். நீண்ட காலமாக பஞ்சாப் காங்கிரஸில் உட்கட்சிப் பூசல் வலுத்து வந்தது. இதனால், நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆனால், அதன் பின்னரும் கூட பஞ்சாப் காங்கிரஸில் பூசல் நின்றபாடில்லை. முதலமைச்சர் அமரீந்தருக்கு எதிராகச் சில அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.
சிரோன்மணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலுடன் அமரீந்தர் கைகோத்துச் செயல்படுகிறார் என்று கட்சிக்குள் அதிருப்தி எழுந்தது.
தனது இராஜினாமா குறித்து அமரீந்தர் சிங் அளித்த பேட்டியில், "நான் கட்சியில் மூன்று முறை அவமானப்படுத்தப்பட்டுள்ளேன். என் மீது ஏதோ ஐயப்பாடு கட்சிக்கு இருக்கிறது. இது எனக்கு மிகப்பெரிய அவமானம். நான் இன்று காலையில் சோனியா காந்தியிடம் பேசும்போதே பதவியை இராஜினாமா செய்வதாகத் தெரிவித்துவிட்டேன். இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன்.
பஞ்சாப் காங்கிரஸில் உள்ள எனது ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருப்பேன். அடுத்த முடிவை எடுப்பதற்கு முன்னர் அவர்களிடம் ஆலோசிப்பேன்" என்று கூறினார்.
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago