2023 ஜூன் 01, வியாழக்கிழமை

லொறி - மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

Freelancer   / 2023 மார்ச் 21 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன், ராமு தனராஜா

பசறை - மொனராகல வீதியில், தொழும்புவத்த பகுதியில் இன்று (21) இடம்பெற்ற லொறி - மோட்டார் சைக்கிள் விபத்தில் மீதும்பிட்டிய தோட்டத்தை வதிவிடமாக கொண்ட நிரோஷன் எனும் இளைஞர்  (வயது 19)  பலியாகியுள்ளார் என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞன் மற்றும் அவரது தந்தை பயணித்த மோட்டார் சைக்கிள், படல்கும்புர - தொழும்புவத்த வீதியில்  வைத்து எதிர்திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதுண்டு, இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய தந்தை பலத்த காயங்களுடன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார்.

லொறியின் சாரதியை கைது செய்துள்ள பசறை பொலிஸார், விபத்து தொடர்பிலான மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பசறை பொது வைத்தியசாலையில் இளைஞனின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .