Editorial / 2021 ஜூலை 21 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் வீட்டில், பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் எரிகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்த 15 வயதான சிறுமி கல்விக்கற்றதாகக் கூறப்படும் பாடசாலையின் அதிபர், பிரதியதிபர் ஆகியோரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
“அவிசாவளை புவக்பிட்டிய கிரிவந்தல பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் அதிபர் மற்றும் பிரதி அதிபர் ஆகியோரே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வாக்குமூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன” என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த சிறுமி விவகாரம் தொடர்பில் அந்த வீட்டிலிருந்த மற்றுமொரு நபரும் நேற்று (20) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவருடைய கையடக்க தொலைபேசி, பொரளை பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.
27 minute ago
34 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
34 minute ago
45 minute ago
1 hours ago