2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

மணல் கொள்ளை; 23 சாரதிகளுக்கு பிணை

Princiya Dixci   / 2021 ஜூலை 25 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரதேசத்திலுள்ள  ஐந்து இடங்களில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த  குற்றச்சாட்டில், நேற்று (24) கைதுசெய்யப்பட்டிருந்த சாரதிகள் 23 பேர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள், எதிர்வரும் 28ஆம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜராகவேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரமின்றி வாவிக்குள் மணல் அகழ்வில் ஈடுபட்டமை மற்றும் ஏற்றிச்சென்றமை இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளாகும்.

கரடியனாறு பொலிஸார் மற்றும் அறந்தலாவ விசேட அதிரடிப்படையினரும் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, இச்சட்டவிரோதச் செற்பாடு தடுக்கப்பட்டுள்ளது.

முந்தன் குமாரவெளி வாவியில் மணல் அகழ்ந்த 10 உழவு இயந்திரங்கள் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.

அதேவேளை,  கொஸ்கொல்ல, ஈரளக்குளம், மரப்பாலம் மற்றும் இலுப்படிச்சேனை ஆகிய பிரதேசங்கள் ஊடாக அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரங்களையும், கரடியனாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு சந்தேகநபர்களின் 3 டிப்பர் வாகனங்கள் மற்றும் 20 உழவு இயந்திரங்களும் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில்  தடுத்து வைக்கப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .