Editorial / 2022 ஜூன் 09 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளக்காடு பிரதேசத்தில் யாணை தாக்குதலினால் 6 மாத ஆண் சிசு நேற்று (08) புதன்கிழமை உயிரிழந்துள்ளதென அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த 6 மாதங்களான சுதர்சன் சதுர்சன் என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் குடும்ஸ்தர்களான கணவனும் மனைவியும் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முதலாளி ஒருவரின் மாட்டுப்பட்டி மாடுகளை பராமரிக்கும் வேலையை பள்ளக்காடு பிரதேசத்தில் தங்கியிருந்து செய்துவருகின்றனர்.
சம்பவதினமான நேற்று (08) மாலை 5 மணியளவில் அந்த பகுதியிலுள்ள மரத்தின் கீழ் பாயில் சிசுவை படுக்க வைத்துவிட்டு இருவரும் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த காட்டுயானை மரத்தின் கீழ் படுத்திருந்த சிசுவை தாக்கியுள்ளது.
சிசுவின் உடற்பாகங்கள் சிதற, சம்பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது
இதனையடுத்து உயிரிழந்த குழந்தையை அங்கிருந்து மீட்டு அக்கரைப்பற்று ஆதர வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
3 minute ago
10 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
52 minute ago