R.Maheshwary / 2022 ஜூலை 06 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நாவலப்பிட்டி இ. போ. ச டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடும் நீண்ட தூர மற்றும் குறுந்தூர பஸ் சேவைகள் இன்மையால், தாம் கடும் சிரமங்களுக்கும் பல்வேறு அசௌகரியங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலை - நாவலப்பிட்டி வீதியில், தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள், சேவையில் ஈடுபடவில்லை எனவும், இதன் காரணமாக ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் பருவ பயணச்சீட்டுடன் (சீசன்) தமது அன்றாட கடமைகளுக்கு செல்லும் ஏனைய பிரயாணிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டீசல் நெருக்கடியால் அந்த வீதிகளில் தனியார் பஸ்கள் சரியாக இயங்காததாலும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
நாவலப்பிட்டி டிப்போவில் கடும் டயர் தட்டுப்பாடு நிலவுவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் டயர்கள் இல்லாததால் சுமார், 22 பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாவலப்பிட்டி டிப்போ முகாமையாளர் அனுர ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை தொடர்பாக மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப டயர் நெருக்கடிக்கு தீர்வு கிடைத்ததன் பின்னர் எதிர்காலத்தில் பஸ்களை முறையாக சேவையில் ஈடுபடுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
48 minute ago
57 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
57 minute ago
3 hours ago