2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

தாய்க்கு பயந்து குளத்துக்குள் பாய்ந்த சிறுவன் பலி

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

பிபிலை- மெதகம பெல்லன்ஓயாவுக்கு அருகில், மீன் வளர்ப்புக்காக அமைக்கப்பட்டிருந்த குளமொன்றில் விழுந்து 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் தனது 4 மற்றும் 11 வயதுடைய சகோதரர்களுடன், நேற்று மாலை 3.30 மணியளவில் பெல்லன்ஓயாவுக்கு நீராடச் சென்றுள்ளார்.

இதன்போது அதற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மீன் வளர்ப்புக்கான குளத்தைப் பார்த்துக்கொண்டிருந்த போது, அவர்களது 27 வயதுடைய தாய் பிள்ளைக் கண்டு சத்தம் போட்டவாறு வந்துள்ளார்.

இதன்போது தாய்க்கு பயந்து பிள்ளைகள் மூவரும் குளத்துக்குள் பாய்ந்துள்ளதுடன், 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.

ஏனைய சிறுவர்கள் இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .