Freelancer / 2022 ஜூன் 05 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அனைத்து அரச நிறுவனங்களிலும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையை ஆரம்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.
மாகாண விவசாய அமைச்சின் ஊடாக திட்டத்தை ஒருங்கிணைக்குமாறு விவசாய மாகாண அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
உணவு நெருக்கடியை எதிர்கொள்ள விவசாயிகளுக்கு அறிவூட்டல், வீட்டுத் தோட்டம் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு விவசாய பயிற்றுனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
'எதிர்காலத்தில் உணவு பற்றாக்குறை பற்றி பேசுகிறோம். அந்த சூழ்நிலையை சமாளிக்க, குறுகிய கால பயிர் சாகுபடியை விரைவில் தொடங்குவது அவசியம். இதை அனைவரும் தங்கள் பொறுப்பாக கருத வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டால், விவசாயிகளுக்கு வழிகாட்டத் தவறியதற்கு விவசாய ஆலோசகர்களே பொறுப்பேற்க வேண்டும்.
'அரசுக்கும் விவசாயிக்கும் இடையே உள்ள உறவை விவசாய ஆலோசகர்கள் புரிந்துகொண்டு, ஏற்படும் உணவு நெருக்கடியைச் சமாளிக்க உழைக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார்.
18 minute ago
8 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
8 hours ago
05 Nov 2025