Editorial / 2021 நவம்பர் 18 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
சாய்ந்தமருது கடற்கரை பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், நேற்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரியநீலாவணை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து அப்பகுதிக்குச் சென்ற விசேட அதிரடிப் படையினர், சிவில் உடையில் அந்நபரோடு போதைப்பொருளை வாங்குபவர்கள் போன்று சூட்சுமமான முறையில் உரையாடினர்.
பின்னர் அதிரடிப்படையினருக்கு போதைப்பொருளை விற்பனை செய்ய முற்பட்ட வேளையில் அவர் கைது செய்யப்பட்டார்.
35 வயதுடைய குறித்த நபரிடம் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 5.250 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்போதைப் பொருளும் இதற்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிலும் கைப்பற்றப்பட்டன.
நான்கு பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .