Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 நவம்பர் 28 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
பொத்துவில், அறுகம்பை பிரதேசங்களில் உடன் அமுலுக்கு வரும் வகையில் கடல் வழி, ஏரி மற்றும் களப்பு என்பவற்றில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் அனைத்து விதமான படகுச் சேவைகளுக்கும் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக, பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எச்.அப்துல் றஹீம், இன்று (28) அறிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் துறைசார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களை குறித்த சேவையில் ஈடுபடுவோருக்கு வழங்கி, அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் படகுச் சேவையினை மேற்கொள்ளவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், இது சம்பந்தமான கலந்துரையாடல், படகு உரிமையாளர்களுடன் நடத்தப்படுமெனவும், அறிவித்தல் வழங்கும் வரை படகுச் சேவையில் ஈடுபடவேண்டாமெனவும் கேட்டுள்ளார்.
இதனை மீறி செயற்படுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவித்துள்ளார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago