2021 ஒக்டோபர் 21, வியாழக்கிழமை

பஸ் மோதியதில் ஒருவர் பலி; சாரதி கைது

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.கிருஸ்ணா

திருத்தப்பணிகளில் ஈடுபடும் பஸ் ஒன்று மோதியதில்,   நபர்ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி- பெனிதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையான சரத்குமார பியதாஸ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டியிலிருந்து கினிகத்தேனை பகுதிக்கு பயணித்த, நாவலப்பிட்டி டிப்போவுக்குச் சொந்தமான திருத்தப்பணி சேவை பஸ், கினிகத்தேனை அனுரத்த ஆரம்ப பாடசாலைக்கு அருகில், குறித்த நபர் மீது மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த நபர், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

எனினும் விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி, மதுபோதையில் இருந்துள்ளதுடன் விபத்து தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்காது தலைமறைவாகிய நிலையில், நாவலப்பிட்டி போக்குவரத்து பொலிஸார் அவரை கைதுசெய்து, நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X