Freelancer / 2023 மார்ச் 29 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ரி. சகாதேவராஜா, கனகராசா சரவணன், வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின்( சுவாட்- Swoad) தலைவரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான வடிவேல் பரமசிங்கம்(வயது 46) நேற்று நள்ளிரவு இடம் பெற்ற கோர விபத்தில் பரிதாபமாக பலியானார்.
அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற போது, பொலன்னறுவை வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செவணப்பிட்டிய பகுதியில் நேற்று(29) நள்ளிரவு 12.40 மணியளவில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.
இதில் இரு பிள்ளைகளின் தந்தையான பரமசிங்கம் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார்.
அருகில் இருந்த சாரதி படுகாயத்துக்குள்ளாகி பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இதில் கனரகவாகன சாரதி கைது செய்துள்ளதாக வெலிகந்தை பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிக்கந்தைப் போக்குவரத்து பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். R




16 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
41 minute ago
1 hours ago
1 hours ago