2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

மது எதிர்ப்பு தினம் 2023 ஆரம்பித்து வைப்பு

Janu   / 2023 ஜூன் 04 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 யது பாஸ்கரன்

சர்வதேச புகைத்தல் - மது எதிர்ப்பு தினம் 2023 ஆரம்பித்து கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ளது

நாடளாவிய ரீதியில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் மே மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதி விழிப்புணர்வு மற்றும் கொடிவிற்பனை வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில் குறித்த செயற்றிட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு கொடிகள், ஸ்டிக்கர்கள் மற்றும் உண்டியல்கள் வழங்கி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும் "புகைத்தலிருந்து மீண்ட ஓர் கிராமம் : மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் தேசம்" எனும் தொனிப்பொருளில் நடப்பாண்டுக்கான கொடி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

சர்வதேச புகைத்தல் - மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொடி வாரத்தில்,புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வை சமூக மட்டத்தில் ஏற்படுத்தும் நோக்குடன் குறித்த கொடிவார தினம் கொண்டாடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சமுர்த்தி முகாமையாளர், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள், பிரதேச செயலக நிதி உதவியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .