2021 ஒக்டோபர் 22, வெள்ளிக்கிழமை

நகை திருட்டு; நபர் கைது

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 30 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்றில் வீடொன்றை உடைத்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான 18 பவுன் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடி சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை, அக்கரைப்பற்று பொலிஸார் நேற்று (29) கைது செய்துள்ளனர்.

அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றில் கட்டட நிர்மணப் பணியில் ஈடுபட்ட நபர், கடந்த சனிக்கிழமை (28) வீட்டின் கூரையை உடைத்து, பணம் மற்றும் நகையை திருடியதாக அக்கரைப்பறு பொலிஸ் நிலையத்தில், வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டையடுத்து மேற்படி சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த திருட்டுச் சம்பவர் சி.சி.டி.வி கமெராவில் பதிவாகியுள்ளதாக பெரும் குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி  உப பொலிஸ் பரிசோதகர் ஏ.எல். அசீம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X