R.Maheshwary / 2022 ஜூன் 29 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
இந்த மாதம் 17ஆம் திகதி ஜேர்மனியிலிருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொண்டு, இலங்கைக்கு வந்த மூவர், கொழும்பில் இருந்து எல்ல பகுதிக்குச் சென்று, மீண்டும் அங்கிருந்து கண்டி செல்வதற்காக முகவர் ஒருவர் ஊடாக ரயில் டிக்கட்டுகளை பதிவு செய்திருந்தனர்.
குறித்த ரயில் டிக்கட்டுகளை பதிவு செய்து கொடுத்த தனியார் நிறுவனமானது ஜெர்மனிய பிரஜைகள் மூவரிடமும் கட்டணமாக 35 டொலர் அறவிட்டதாக ஜெர்மனியை பிரஜைகள் தெரிவிக்கின்றனர்.
எனினும் குறித்த தனியார் நிறுவனம் கண்டிக்கு பதிவு செய்ய வேண்டிய ரயில் டிக்கட்டை நானுஒயாவிற்கு மாத்திரமே பதிவு செய்து கொடுத்துள்ளது.
அதனை சரியாக அவதானிக்காத ஜெர்மனி பிரஜைகள் மூவரும் தங்களுக்கு கண்டிக்கான டிக்கட் இருப்பதாக நினைத்து, 27ஆம் திகதி முதலாம் வகுப்பில் கண்டிக்கான தங்களுடைய பயணத்தை தொடர்ந்துள்ளனர்.
ரயிலில் டிக்கட் பரிசோதகர்களால் இவர்களுடைய டிக்கட்டுகளை பரிசோதனை செய்த போது, இவர்களுக்கு நானுஒயா வரை மாத்திரமே டிக்கட் இருப்பதாக ஜெர்மனியை பிரஜைகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளாகிய அவர்கள், தங்களுக்கு கண்டி வரை பயணிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறும் தாங்கள் மேலதிக பணத்தை கண்டி ரயில் நிலையத்தில் செலுத்துவதாகவும் தெரிவித்து தாம் மோசடி செய்யப்பட்ட தகவலை தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களுக்கு இரண்டாம் வகுப்பில் கண்டி வரை பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜெர்மனிய பிரஜைகளுக்கு ஆசனங்களை ஒதுக்கிய நிறுவனத்துடன், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதிலும் அது முடியாமல் போயுள்ளது.
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago