2021 ஜூலை 31, சனிக்கிழமை

‘பல அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்த போதிலும் தேசியக் கொள்கை தவறவிடப்பட்டது’

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு சுதந்திரமடைந்த பின்னர், பல அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த போதிலும், நாட்டின் மேம்பாட்டுக்காக தேசியக் கொள்கையை உருவாக்க எல்லா அரசாங்கங்களும் தவறிவிட்டன என்று, மத்திய மாகாண ஆளுநர் லலித்யூ கமகே தெரிவித்தார்.  

மாத்தளை மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் செயற்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக அவர் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் ஓர் அம்சமாக, நேற்று (13), உக்குவலை பிரதேச சபை, மாத்தளை மாநகரசபை ஆகியவை பற்றிய கலந்துரையாடல் ஒன்று, மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.  

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  

தற்போது நாட்டில் தலையெடுத்துள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இதுவே மூலகாரணம் என்று தெரிவித்த அவர்,  

இந்நிலையில், நாட்டைச் சரியான பாதைக்கு இட்டுச் செல்லும் தகுதியும் திறமையும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவிடமே உண்டு என்றும் அவருடைய இந்தத் திறமை, வேறு யாரிடமும் இல்லை என்றும் அவர் கூறினார்.  

மத்திய மாகணத்தின் கல்வி நிலை, திருப்திகரமாகக் காணப்படவில்லை என்றும் பாடசாலைகளில் ஆசிரியர் வளம் மேலதிகமாகவே இருந்தாலும், குறிப்பிட்ட சில முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையும் நிலவிவருவதாகவும் அவர் கூறினார்.  

மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றபோது, மாநகரசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .