2021 டிசெம்பர் 03, வெள்ளிக்கிழமை

பண மழை பொழிந்த குரங்கு

A.K.M. Ramzy   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

லக்னோ

உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞரிடம் இருந்த பையை பறித்து, மரத்தின் மீது ஏறிய குரங்கு, பையிலிருந்த பணத்தை மக்கள் மீது மழையாக பொழிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேசமாநிலம் ராம்பூர் மாவட்டம், ஷாகாபாத் பகுதியைச் சேர்ந்த  வழக்கறிஞர், முத்திரைகள் வாங்குவதற்காக ஒரு பையில் 2 இலட்சம் ரூபாய் ரொக்கத்துடன் கருவூல அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.

அங்கு வந்த ஒரு குரங்கு, வழக்கறிஞரிடம் இருந்த பணப் பையை பறித்துக் கொண்டு ஓடியது. அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர் குரங்கை துரத்தினார். அருகிலிருந்த மரத்தில் குரங்கு வேகமாக ஏறியது.

குரங்கை வழக்கறிஞர் துரத்திச் சென்றதை பார்த்தவர்கள் மரத்தடியில் கூடினர். பையை திறந்த குரங்கு, அதிலிருந்த இரண்டு பணக் கட்டுகளை எடுத்துக் கொண்டு பையை மட்டும் கீழே போட்டது. பையை வழக்கறிஞர் எடுத்து பார்த்த போது அதில் ஒரு இலட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது.

இதற்கிடையில், இரண்டு பணக் கட்டுகளை எடுத்த குரங்கு, அதை பிரித்து மரத்தில் தாவி குதித்தபடி கீழே விசிறியடித்தது.

மரத்தடியில் இருந்தவர்கள் பணத்தை எடுத்து வழக்கறிஞரிடம் கொடுத்தனர். எனினும் 95 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழக்கறிஞருக்கு கிடைத்தது. பணத்தை எடுத்த சிலர், அதை வழக்கறிஞரிடம் கொடுக்காமல் சென்றுவிட்டது தெரிந்தது.

எனினும், 'இந்த அளவாவது திரும்பக் கிடைத்ததே' என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்த மக்களுக்கு வழக்கறிஞர் நன்றி கூறினார்.

பணத்தை குரங்கு வீசியதையும், அதை மக்கள் பொறுக்கி எடுத்ததையும் 'வீடியோ' எடுத்த சிலர், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X