Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 மார்ச் 31 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக கடந்த காலங்களில் இடை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ.தொ.காவின் மக்கள் சந்திப்பு மீண்டும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஆறு மாத காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மக்கள் குறைகேட்கும் சந்திப்பின் முதல் சந்திப்பு வலப்பனை பிரதேசத்தின் உடப்புஸ்ஸலாவ டலோஸ் தோட்டம் முத்து மண்டபத்தில் ஆரம்பமாகியது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர் வழங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலைமையில் இச் சந்திப்பு இடம்பெற்றது.
இதைத் தொடர்ந்து உடப்புஸ்ஸலாவை நகர மக்கள் உள்ளிட்ட சென் மாக்கிறட் தோட்ட மக்களை அமைச்சர் கே.டி.எஸ்.வரவேற்ப்பு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் கலந்துக் கொண்டார்.
அங்கு அமைச்சரின் கவனத்திற்கு மக்கள் தங்களுக்கான குறைப்பாடுகளை தெரிவித்தனர்.
இதனையடுத்து மூன்றாவது சந்திப்பு உடப்புஸலாவை எமஸ்ட் தோட்ட விளையாட்டு மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்ட அமைச்சருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதுடன் எமஸ்ட் தோட்ட மக்கள் உள்ளிட்ட பலர் தங்களுடைய குறைப்பாடுகளை மனம் திறந்து வெளியிட்டனர்.
அத்துடன் வீடமைப்பு, குடிநீர், மற்றும் தோட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் அடக்கு முறைகள் மற்றும் தொழில் கெடுப்பிடிகள் தொடர்பில் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்களை தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
அதேநேரத்தில் உடப்புஸ்ஸலாவை பிரதேச மக்களுக்காக ஆரம்பமான மூன்று மக்கள் சந்திப்பில் மக்கள் குறைகளை செவிமெடுத்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் மக்கள் குறைகளை தீர்ப்பதற்கு அரசியல் ரீதியாகவும்,தொழிற்சங்க ரீதியாகவும் பேச்சு வார்த்தை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இப்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட பிரதேசவாரியான மக்கள் குறை கேட்கும் மக்கள் சந்திப்பு தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் நம்பி்க்கை தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் ஜீவன் அண்மையில் திடீர் தீ விபத்துக்கு உள்ளான சந்திரகாந்தி தோட்ட தேயிலை தொழிற்சாலையை நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த மக்கள் சந்திப்பில் நுவரெலியா பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் வேலு யோகராஜ் மற்றும் வலப்பனை பிரதேச சபையின் முன்னால் இ.தொ.கா உறுப்பினர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநதிகளும் கலந்துக் கொண்டனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
34 minute ago
42 minute ago
50 minute ago