2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

11 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 17 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

கல்முனைப் பிரதேசத்தில் திவிநெகும உதவி பெறும் குடும்பங்களில் 11 குடும்பங்கள் வாழ்வாதார உதவிக்காக  சீட்டிலுப்பு மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், குடும்பமொன்றுக்கு 150,000 ரூபாய் பெறுமதிப் படி 11 குடும்பங்களுக்கும் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது.

இதில் 09 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கும்  ஒரு குடும்பத்துக்கு சிறு வியாபார நடவடிக்கைக்கும் ஒரு குடும்பத்துக்கு  கடற்றொழிலுக்கான  வாழ்வாதார உதவி வழங்கப்பட்டதாக கல்முனைப் பிராந்தியத்தின் திவிநெகும காரியாலய முகாமையாளர் எ.ஆர்.எம்.சாலிஹ் தெரிவித்தார்.

இந்நிலையில், கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக மீனவர் ஒருவருக்கு திங்கட்கிழமை (16) வள்ளம் வழங்கிவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .