2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

14 வயது சிறுமியிடம் சில்மிஷம் இளைஞனுக்கு விளக்கமறியல்

Editorial   / 2021 ஜூலை 14 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசமொன்றில், 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 21 வயதுடைய இளைஞனை எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான்  ஏ.சி.எம்.ரிஸ்வான், நேற்று செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டார் 

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமியை அவர்களது பொற்றோருக்கு தெரியாமல் சம்பவதினமன ஞாயிற்றுக்கிழமை (11) சிறுமியின் வீட்டுக்கு அருகாமையிலுள்ள  கோவிலுக்கு அழைத்து சென்று இளைஞன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சிறுமியின் பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இதனையடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் குறித்த  இளைஞனை   திங்கட்கிழமை (12) கைது செய்து  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்  நீதவான்  ஏ.சி.எம்.றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .