2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

18 தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகினர்

R.Maheshwary   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

நோர்வூட்- ஸ்டொக்கம் தோட்டத்தில், கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 18 தொழிலாளர்கள் இன்று (13) காலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான 18 பேரும் டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஐவர் மாத்திரம் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தேயிலை மலையிலிருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூட்டை கழுகொன்று கலைத்ததன் காரணமாக, குளவிகள் கலைந்து, தொழிலாளர்களை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .