2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

நுவரெலியா - ஹட்டன் காட்டுத்தீ

Menaka Mookandi   / 2011 மார்ச் 31 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.தியாகு)

நுவரெலியா - ஹட்டன் பிரதான பாதையில் டெவன் நீர் வீழ்ச்சிக்கு அருகாமையில் இரண்டரை ஏக்கர் காணி நிலப்பரப்பு தீப்பற்றியுள்ளதாக நுவரெலியா அனர்த்த  முகாமைத்துவ முகாமையாளர் எரந்த ஏமவர்தன  தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை அடுத்து ஹட்டன், திம்புள்ள பொலிஸாரும் நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு படையினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதனால் இவ்வீதியினூடான போக்குவரத்து சிலமணிநேரம் பாதிக்கப்பட்டதாகவும் சம்பவத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் அனர்த்த  முகாமைத்துவ முகாமையாளர் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக இம்மாவட்டத்தில் கடுமையான வெயில் காணப்படுவதால் இந்த தீ ஏற்பட்டிருக்கலாம் அல்லது விசமிகளால் தீ வைக்கப்பட்டுள்ளதா என திம்புள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இலங்கை மின்சார சபை ஊழியர்கள் ஸ்தலத்திற்கு விரைந்து மின் துண்டிப்பை மேற்கொண்டு தீ மேலும் பரவுவதை தடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .