2022 ஜனவரி 18, செவ்வாய்க்கிழமை

மென்பானம் அருந்திய குழந்தை பலி: தாய் வைத்தியசாலையில்

Super User   / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடையிலிருந்து  வாங்கிவரப்பட்ட மென்பானத்தை அருந்திய ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததுடன் அக்குழந்தையின் தாய் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் மொனராகலை வெல்லவாயவில் இடம்பெற்றுள்ளது.

ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அக்குழந்தை நேற்று சனிக்கிழமை இறந்ததாக மொனராகலை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. அக்குழந்தையின் தாய் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார்.

இக்குழந்தையின் தந்தை வெல்லவாயவிலுள்ள கடையொன்றிலிருந்து இரு போத்தல் மென்பானத்தை வாங்கி வந்து அத்தாயிடம் வழங்கியுள்ளார்.  அத்தாய் மென்பானத்தை தனது குழந்தைக்கும் அயல்வீட்டு குழந்தைக்கும் வழங்கியதுடன் தானும் அருந்தியுள்ளார். இம்மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(சுமணசிறி குணதிலக்க- மொனராகலை)

 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X