2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

29ஆவது ஆண்டு தேசிய பாடசாலை தின விழா

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 07 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர்

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு, 29ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கல்லூரி அதிபர் ஏ.பி. முஜின் தலைமையில், தேசிய பாடசாலை தின விழா, கல்லூரியின் அதாஉல்லா கேட்போர் மண்டபத்தில் நேற்று (06) கொண்டாடப்பட்டது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக பல வருடங்கள் கடமையாற்றி ஓய்வுபெற்ற ஏ.எல்.எம். காசிம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் 2020ம் ஆண்டு, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் விசேட பெறுபேறு பெற்ற மாணவர்களும் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .