2021 ஓகஸ்ட் 03, செவ்வாய்க்கிழமை

4 ஆவது முறையாகவும் போராட்டம்!

Ilango Bharathy   / 2021 ஜூன் 10 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள், அவர்களின் நலன்சார்ந்த உரிமைகளை முன்வைத்து,  நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் வலாகத்தில் நேற்றைய தினம் (9) அடையாளப் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை  முன்னெடுத்தனர்.

ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பணி பகீஷ்கரிப்பில் 300 இற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.கடந்த இரண்டு மூன்று வருடங்களுக்கு மேலாக தொழில்புரியும் சுகாதார பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம், மேலதிக சேவை நேரத்திற்கான கொடுப்பனவு, விசேட கொடுப்பனவு மற்றும் கொரோனா பாதுகாப்பு உடை உள்ளிட்ட சலுகைகளை தமக்கும் வழங்க வேண்டும் போன்ற   கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் நேற்றுடன்  நான்காவது முறையாக போராட்டத்தினை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .