2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

6 ஆண்களைத் திருமணம் செய்த பெண்

Ilango Bharathy   / 2023 மே 14 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெண்ணொருவர் 6 ஆண்களை ஏமாற்றித்  திருமணம் செய்து அவர்களது  நகை மற்றும் பணத்தை அபகரித்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ள சம்பவம் விழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகன் மணிகண்டன். இவர் பேஸ்புக்  மூலம் மகாலட்சுமி என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தனது வீட்டில் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிப்பதாகவும் இதனால் தனது வீட்டை விட்டு வருவதாகவும் , இருவரும் திருமணம் செய்துகொள்வோம் எனவும்  மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். திருமணத்தின் போது, மணிகண்டனின்  வீட்டிலிருந்து மகாலட்சுமிக்கு 8 பவுனில் நகை போட்டுள்ளனர்.

இந்நிலையில் திருமணமான 26-வது நாள் தனது வீட்டில் சொத்து பிரச்சினை உள்ளதாகவும்   தான்  ஊருக்கு சென்று அப் பிரச்சனையை தீர்வு கண்டுவிட்டு, வந்துவிடுகிறேன் என்று மகாலட்சுமி கூறிச் சென்றுள்ளார்.

மனைவி எப்போது திரும்பி வருவார் என்கிற ஏக்கத்துடன்  மணிகண்டனும் காத்திருந்துள்ளார். மனைவிக்கு தொலைபேசியில் தொடர்புகொண்ட போதும் அவர் அழைப்பினை எடுக்கவில்லை. இதன் பின்னரே  மணிகண்டனின் குடும்பத்தினருக்கு மகாலட்சுமி மீது சந்தேகம் வலுத்தது.

இந்நிலையில் தனக்கு அடிக்கடி போன் செய்தால் கொலை செய்து விடுவேன் என்று மகாலட்சுமி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

மனைவியின் இந்த மிரட்டலை சற்றும் எதிர்பாராத மணிகண்டன் அதிர்ந்து போய் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மகாலட்சுமி ஏற்கனவே 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும் என்பதும் 5-வதாக அவர் விரித்த வலையில் சிக்கியவர் தான் மணிகண்டன்  என்பதும்,  தெரியவந்துள்ளது.

அத்துடன் ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்கள் வீடுகளில் இருந்து கிடைக்கும் நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விடுவதை மகாலட்சுமி ஒரு தொழிலாகவே பார்த்து வந்துள்ளார் என்பதும் அவர்தற்போது   6-வதாக ஒரு நபரைத்த  திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும், தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாது 5ஆம் வகுப்பு வரைக்கும் படித்துள்ள மகாலட்சுமியின் வயது 32 என்பதும் அவருக்கு 17 மற்றும் 15 வயதில் 2 மகன்களும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X