Shanmugan Murugavel / 2021 ஜூலை 24 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

டோக்கியோ 2020-இன் ஆரம்பத்தை நினைவுறுத்தும் முகமாக உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒஸாகா ஒலிம்பிக் தீபத்தை நேற்று பற்ற வைத்திருந்தார்.

ஆரம்ப நிகழ்வின்போது முதற் தடவையாக ஆண்களும், பெண்களும் கொடிகளை ஏந்தியிருந்தனர்.

இந்நிலையில், ஒலிம்பிக் தீபமானது ஒலிம்பிக் சம்பியன்கள், கூடைப்பந்தாட்ட ஜாம்பவான்கள், வைத்தியரொருவர், தாதியரொருவர், பரா ஒலிம்பியன் ஒருவர், 2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் கடத்தப்பட்டிருந்தது.

இதேவேளை, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், பாகிஸ்தானின் கொடிகளை ஏந்தியவர்கள் முகக் கவசங்களை அணிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப நிகழ்வில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஐக்கிய அமெரிக்க முதற் பெண்மணி ஜில் பைடன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
8 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Jan 2026