2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

லிவர்பூலிருந்து வெளியேறும் அணித்தலைவர்?

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 20 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான லிவர்பூலின் அணித்தலைவரான ஜோர்டான் ஹென்டர்சனின் எதிர்காலம் நிச்சயமற்றதாகக் காணப்படுகிறது.

ஏனெனில், லிவர்பூலுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்தத்தைக் கொண்டுள்ள மத்தியகளவீரரான ஹென்டர்சனுடனான லிவர்பூலின் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது முறிவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 31 வயதான ஹென்டர்சனை ஒப்பந்தம் செய்வது குறித்து லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டும், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனும் ஆராய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .