2023 ஜூன் 10, சனிக்கிழமை

நியூசிலாந்தை வீழ்த்துமா இலங்கை?

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 24 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, ஒக்லன்டில் நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இவ்வாண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத் தொடருக்கு தரவரிசையில் முதல் எட்டு இடங்களிலுள்ள அணிகளே நேரடியாகத் தகுதி பெறும் என்ற நிலையில், இத்தொடரில் நியூசிலாந்தை வெள்ளையடித்தால்தான் இலங்கை உலகக் கிண்ணத்துக்கு நேரடியாகத் தகுதி பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலோ மத்தியூஸ் குழாமுக்குத் திரும்பியிருப்பது மத்திய வரிசையை நிலைப்படுத்த இலங்கைக்கு உதவுமென்றபோதும் பதும் நிஸங்க, குசல் மென்டிஸ், தனஞ்சய டி சில்வா போன்றோரிடமிருந்தும் தொடர்ச்சியான பெறுபேறுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

பந்துவீச்சுப் பக்கமும், கசுன் ராஜிதவுடன், டில்ஷான் மதுஷங்க, மதீஷ பத்திரண, பிரமோத் மதுஷன் உள்ளிட்ட இளம் வேகப்பந்துவீச்சாளர்களிலேயே இலங்கை தங்கியிருக்க வேண்டியுள்ளது.

மறுப்பக்கமாக கேன் வில்லியம்ஸன், டிம் செளதி, டெவோன் கொன்வே, மிற்செல் சான்ட்னெர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொடரானது மார்க் சப்மன், றஷின் றவீந்திரா, வில் யங்க் ஆகியோருக்கான வாய்ப்பாகக் காணப்படுகின்றது. தவிர, பின் அலெனும் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .