2023 ஜூன் 10, சனிக்கிழமை

நியூசிலாந்து எதிர் இலங்கை: நாளை மூன்றாவது போட்டி

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 30 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது, ஹமில்டனில் நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை நியூசிலாந்து வென்றதுடன், மழையால் இரண்டாவது போட்டி கைவிடப்பட்ட நிலையில், தொடரைச் சமப்படுத்துவதற்கு இப்போட்டியை இலங்கை கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையிலுள்ளது.

இப்போட்டியில் வென்றால் கூட உலகக் கிண்ணத்துக்கான நேரடியாகத் தகுதி பெறுவதென்பது தென்னாபிரிக்காவை நெதர்லாந்து வெல்வதிலேயே தங்கியுள்ளது.

மீண்டுமொரு முறை இலங்கையின் துடுப்பாட்டமே கவனம் பெறுவதுடன், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் வனிடு ஹஸரங்கவின் பெறுபேறுகளும் கவனம் பெறுகையில் அவர் உறுதியான பெறுபேற்றை வெளிப்படுத்த வேண்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .