2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

இந்தியாவுக்கெதிராக தொடரைச் சமப்படுத்துமா நியூசிலாந்து?

Shanmugan Murugavel   / 2022 நவம்பர் 22 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


நியூசிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு - 20 சர்வதேசப் போட்டியானது நேப்பியரில் இன்று நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. 

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் முடிவேதும் பெறப்படாததோடு, இரண்டாவது போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இப்போட்டியை வென்றாலே தொடரை நியூசிலாந்து சமப்படுத்த முடியும். 

மருத்துவ சந்திப்பொன்று காரணமாக இப்போட்டியை கேன் வில்லியம்ஸன் தவறவிடுகின்ற நிலையில், இப்போட்டியில் நியூசிலாந்துக்கு டிம் செளதி தலைமை தாங்கவுள்ளதுடன், குழாமில் மார்க் சப்மன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளபோதும், அணியில் அவரை மிஷெல் பிறேஸ்வெல் பிரதியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்திய அணியில் ஹர்ஷால் பட்டேலுக்கு இப்போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X