2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

நான்காவது டெஸ்டில் முன்னிலையில் இங்கிலாந்து

Shanmugan Murugavel   / 2022 ஜனவரி 06 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கெதிரான நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து முன்னிலையில் காணப்படுகின்றது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் தொடரில், சிட்னியில் நேற்று ஆரம்பித்த நான்காவது டெஸ்டின் நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பற் கமின்ஸ், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

அந்தவகையில், மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாளில் நிதானமான ஆரம்பத்தை மேற்கொண்ட அவுஸ்திரேலியா, 30 ஓட்டங்களுடன் டேவிட் வோணரை ஸ்டூவர்ட் ப்ரோட்டிடம் இழந்தது. தொடர்ந்து மார்க்கஸ் ஹரிஸும், மர்னுஸ் லபுஷைனும் இனிங்ஸை நகர்த்திய நிலையில், 38 ஓட்டங்களுடன் ஜேம்ஸ் அன்டர்சனிடம் ஹரிஸ் வீழ்ந்ததோடு, 28 ஓட்டங்களுடன் மார்க் வூட்டிடம் லபுஷைன் வீழ்ந்தார்.

இந்நிலையில், நேற்றைய முதல் நாள் முடிவில் தமது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. தற்போது களத்தில், ஸ்டீவ் ஸ்மித் ஆறு, உஸ்மான் கவாஜா நான்கு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .