Shanmugan Murugavel / 2023 மார்ச் 27 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் உள்ளூர் இருபதுக்கு – 20 தொடரான பெண்களின் பிறீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் சம்பியனானது.
மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸை வென்றே மும்பை இந்தியன்ஸ் சம்பியனானது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கப்பிட்டல்ஸ், அணித்தலைவி மெக் லன்னிங்கின் 35 (29), ராதா யாதவ்வின் ஆட்டமிழக்காத 27 (12), ஷிகா பாண்டேயின் ஆட்டமிழக்காத 27 (17) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், ஹேலி மத்தியூஸ் 4-2-5-3, அமெலியா கெர் 4-0-18-2, இஸி வொங் 4-0-42-3 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 132 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ், நட் ஷிவர்-ப்ரண்டின் ஆட்டமிழக்காத 60 (55), அணித்தலைவி ஹர்மன்பிறீட் கெளரின் 37 (39), அமெலியா கெர்ரின் ஆட்டமிழக்காத 14 (08) ஓட்டங்களோடு 19.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில், ராதா யாதவ் 4-0-24-1, ஜெஸ் ஜொனாசென் 4-0-28-1, மரிஸனே கப் 4-0-22-0, ஷிகா பாண்டே 4-0-23-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகியாக நட் ஷிவர்-ப்ரண்டும், தொடரின் நாயகியாக ஹேலி மத்தியூஸும் தெரிவாகினர்.
2 minute ago
10 minute ago
16 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
10 minute ago
16 minute ago
38 minute ago