2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

தொடரைக் கைப்பற்றப்போவது இந்தியாவா? அவுஸ்திரேலியாவா?

Shanmugan Murugavel   / 2023 மார்ச் 22 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேசப் போட்டியானது, சென்னையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலியாவும் வென்ற நிலையில் இப்போட்டியானது தொடரைத் தீர்மானிக்கும் போட்டியாகக் காணப்படுகிறது.

முதலிரண்டு போட்டிகளிலும் வேகப்பந்துவீச்சின் ஆதிக்கம் காணப்பட்ட நிலையில், சென்னை ஆடுகளமானது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய அணியைப் பொறுத்த வரையில் டேவிட் வோர்னர், கிளென் மக்ஸ்வெல் ஆகியோர் அணிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், அஸ்தன் அகரும் அணியில் இடம்பெறக்கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது. இவர்கள் மூவரும் மர்னுஸ் லபுஷைன், ஷோன் அபொட், நாதன் எலிஸைப் பிரதியிடலாம்.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் மாற்றமிருக்காது என எதிர்பார்க்கப்படும் நிலையில், சூரியகுமார் யாதவ்வுக்கான இறுதி வாய்ப்புகளிலொன்றாக இப்போட்டியிருக்கும் எனக் கருதப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .