2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

மைதானத்துக்கு மீண்டும் வருகிறார் மலிங்க

Editorial   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரும், உலக சாதனை படைத்தவருமான லசித் மலிங்கவை இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் உறுப்பினராக நியமிக்க ஸ்ரீ லங்கா கிரிக்கெட் பரிசீலித்து வருவதாக அந்நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லசித் மலிங்க போன்ற அனுபவம் வாய்ந்த வீரரின் வழிகாட்டுதல், இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறிய அந்த அதிகாரி, இலங்கையின் வளங்களைப் பயன்படுத்துவது ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் மலிங்கவுடன் இன்னும் ஆலோசிக்கவில்லை என்றும் எதிர்காலத்தில் அவருடன் ஆலோசிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பல வெளிநாட்டு அணிகளிடமிருந்து மலிங்கவுக்கு வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்கான அழைப்புகள் கிடைத்திருப்பதாக அறிய முடிகிறது

38 வயதான லசித் மலிங்க, இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்டுகளையும், 226 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 338 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளதுடன், 84 இருபதுக்கு 20 போட்டிகளில்  107 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .