2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

கோப்பா அமெரிக்கா: இறுதிப் போட்டியில் பிரேஸில்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 06 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலில் நடைபெற்று வரும் கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான பிரேஸில் தகுதி பெற்றுள்ளது.

இன்று அதிகாலை நடைபெற்ற பெருவுடனான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு பிரேஸில் தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியின் முதற்பாதியில் பெருவின் கோல் கம்பத்தை நோக்கி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய பிரேஸில், தமது முன்களவீரர் நெய்மர் மூன்று பின்களவீரர்களைத் தாண்டி இன்னொரு முன்களவீரர் லூகாஸ் பக்கெட்டாவிடம் கொடுத்த பந்தை அவர் கோலாக்கி பெற்ற கோலின் காரணமாகவே 1-0 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு பிரேஸில் தகுதி பெற்றுள்ளது.

இப்போட்டியின் இரண்டாவது பாதியில் கடந்தாண்டு கோப்பா அமெரிக்கா தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்த பெரு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தபோதும் கோலைப் பெற்றிருக்க முடியவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .