2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

இந்திய முகாமில் இணைந்த றிஷப் பண்ட்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 22 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாவிலிருந்து குணமடைந்ததையடுத்து இந்தியக் குழாமில் றிஷப் பண்ட் இணைந்து கொண்டுள்ளார்.

கட்டாய தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த பின்னரே குழாமுடன் பண்ட் இணைந்து கொண்டுள்ளார்.

இம்மாதம் எட்டாம் திகதி கொரோனாத் தொற்றுக்குள்ளான பண்ட், ஏனைய அணியிருடன் டேர்ஹாமுக்கு பயணித்திருக்கவில்லை. டேர்ஹாமிலேயே பயிற்சிப் போட்டியில் இந்தியா கலந்து கொள்கிறது.

பண்ட் இல்லாத நிலையில் விக்கெட் காப்பாளராக லோகேஷ் ராகுல் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பண்ட் தவிர ரித்திமான் சஹா மற்றும் மேலதிக வீரர் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோரும் தனிமைப்படுத்தலில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .