2021 நவம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

உலகக் கிண்ணத்தில் தீர்ப்பு மறுபரிசீலனை

Shanmugan Murugavel   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அரபு அமீரகம், ஓமானில் இம்மாதம் ஆரம்பிக்கவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின்போது தீர்ப்பு மறுபரிசீலனைத் திட்டம் பயன்படுத்தப்படவுள்ளது.

அந்தவகையில், இனிங்ஸொன்றுக்கு ஒவ்வொரு அணியும் இரண்டு தீர்ப்பு மறுபரிசீலனைகளைக் கொண்டிக்கவுள்ளன.

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் தீர்ப்பு மறுபரிசீலனை காணப்படுவது இதுவே முதற்தடவையாகும்.

இதேவேளை, அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் முடிவுகளைப் பெறுவதற்கு இரண்டு அணிகளும் குறைந்தது 10 ஓவர்களிலாவது துடுப்பெடுத்தாடியிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் ஐந்து ஓவர்களிலேயே முடிவு பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .