2023 ஜூன் 10, சனிக்கிழமை

தேசிய கிரிக்கெட் அணிக்கு கொமர்ஷல் வங்கி அனுசரணை

S.Sekar   / 2023 மார்ச் 24 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியுசிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் இலங்கை அணி பங்கேற்கும் ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் போட்டிகளின் உத்தியோகப்பூர்வ அனுசரணையாளர்களில் ஒருவராக கொமர்ஷல் வங்கி இடம் பிடித்துள்ளது.

'இலங்கையில் மிகவும் பின்பற்றப்படும் ஒரு விளையாட்டாக கிரிக்கெட் திகழ்கின்றது. இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மீது பற்று கொண்டவர்களாகவே பெரும்பாலும் ஒவ்வொரு இலங்கையரும் உள்ளனர்' என்று வங்கியின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவு மற்றும் சந்தைப்படுத்தல் பிரதிப் பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க கூறினார். 'இலங்கை தேசிய கிரிக்கெட் அணியுடன் நேரடியாக இணைந்து கொள்வது ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகக் கருதப்படுகின்றது. இதுவரை முக்கியமான முன்னணி வர்த்தக முத்திரைகளால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. அந்த வகையில் நாட்டின் முன்னணி வர்த்தக முத்திரை என்ற வகையில் கொமர்ஷல் வங்கி நியுசிலாந்தில் இலங்கை அணி விளையாடும் ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளின் போது இந்த பொறுப்பை ஏற்றுள்ளது' என்று அவர் மேலும் கூறினார்.

நியுசிலாந்துக்கு இலங்கை அணி மேற்கொண்டுள்ள சுற்றுலா இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று T20 போட்டிகள் என்பனவற்றை உள்ளடக்கியதாகும். மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி கிறைஸ் சேர்ச்சில் முதலாவது டெஸ்ட் போட்டியுடன் சுற்றுலா ஆரம்பமானது. இந்த டெஸ்ட் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட் கழகத்தின் (ICC) 2021-23 காலப்பகுதிக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாகும். மூன்று 50 ஓவர் ஒருநாள் போட்டிகள் 2023 ICC ஆண்கள் ஒரு நாள் உலகக் கிண்ண சுபர் லீக் போட்டிகளோடு தொடர்புடையது.

கொமர்ஷல் வங்கியின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவு மற்றும் சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் ஹஸ்ரத் முனசிங்க (வலது) இலங்கை கிரிக்கெட்டின் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் உபுல் நவரட்ண பண்டார ஆகியோர் இந்தப் பங்குடைமை பற்றி அறிவிப்பதைப் படத்தில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .