2021 செப்டெம்பர் 23, வியாழக்கிழமை

ஓய்வு பெறும் மத்தியூஸ்?

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 07 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து கருத்திற் கொள்வதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு, இலங்கையணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இவ்விடயத்தை ஆராய்ந்து வருவதாகவும், எதிர்வரும் வாரங்களில் தனது முடிவை அறிவிக்கவுள்ளதாக கிரிக்கெட் சபைக்கு 34 வயதான மத்தியூஸ் கூறியதாகக் கூறப்படுகிறது.

பங்களாதேஷ், இங்கிலாந்துக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு மத்தியூஸ் தெரிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .