Shanmugan Murugavel / 2022 மே 18 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே சட்டோகிராமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்த முதலாவது டெஸ்ட்டானது வெற்றி தோல்வியற்ற முடிவை நோக்கி பயணிக்கிறது.
இன்றைய நான்காம் நாளை, தமது முதலாவது இனிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த பங்களாதேஷ் ஆனது முஷ்பிக்கூர் ரஹீம், லிட்டன் தாஸின் இணைப்பாட்டத்தில் இனிங்ஸை நகர்த்திய நிலையில், 88 ஓட்டங்களுடன் கசுன் ராஜிதவிடம் தாஸ் வீழ்ந்ததோடு, வந்த தமிம் இக்பாலும் உடனேயே 133 ஓட்டங்களுடன் ராஜிதவிடம் வீழ்ந்தார்.
பின்னர் ஷகிப் அல் ஹஸனும், ரஹீமும் இனிங்ஸை நகர்த்திய நிலையில், 26 ஓட்டங்களுடன் அசித பெர்ணாண்டோவிடம் அல் ஹஸன் வீழ்ந்ததுடன், ரஹீமும் 105 ஓட்டங்களுடன் லசித் எம்புல்தெனியவிடம் வீழ்ந்தார். அடுத்து நயீம் ஹஸன் தனஞ்சய டி சில்வாவிடம் வீழ்ந்ததோடு, 20 ஓட்டங்களுடன் தஜியுல் இஸ்லாமும் அசித பெர்ணாண்டோவிடம் வீழ்ந்தார். ஷொரிஃபுல் இஸ்லாமால் துடுப்பெடுத்தாட முடியாமல் போக சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 465 ஓட்டங்களை பங்களாதேஷ் பெற்றது.
பதிலுக்கு, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை இன்றைய நான்காம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில் அணித்தலைவர் டிமுத் கருணாரத்ன 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார். பந்துவீச்சில், தஜியுல் இஸ்லாம் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியிருந்தார்.
நாணயச் சுழற்சி: இலங்கை
இலங்கை: 397/10 (துடுப்பாட்டம்: அஞ்சலோ மத்தியூஸ் 199, தினேஷ் சந்திமால் 66, குசல் மென்டிஸ் 54, ஒஷாத பெர்ணாண்டோ 36 ஓட்டங்கள். பந்துவீச்சு: நயீம் ஹஸன் 6/105, ஷகிப் அல் ஹஸன் 3/60, தஜியுல் இஸ்லாம் 1/107)
பங்களாதேஷ்: 465/10 (துடுப்பாட்டம்: தமிம் இக்பால் 133, முஷ்பிக்கூர் ரஹீம் 105, லிட்டன் தாஸ் 88, மஹ்முடுல் ஹஸன் ஜோய் 58, ஷகிப் அல் ஹஸன் 26, தஜியுல் இஸ்லாம் 20 ஓட்டங்கள். பந்துவீச்சு: கசுன் ராஜித 4/60, அசித பெர்ணாண்டோ 3/72, தனஞ்சய டி சில்வா 1/48, லசித் எம்புல்தெனிய 1/104)
இலங்கை: 39/2 (பந்துவீச்சு: தஜியுல் இஸ்லாம் 1/0)
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025