2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

புது ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சொல்க்ஜர்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 25 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முகாமையாளரான ஒலெ குனார் சொல்க்ஜர் புதிய ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக யுனைட்டெட் நேற்று அறிவித்துள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு வரையில் யுனைட்டெட்டின் முகாமையாளராக சொல்க்ஜர் தொடரவுள்ளார்.

முன்னதாக அடுத்தாண்டுடன் யுனைட்டெட்டுடனான சொல்க்ஜருடன் ஒப்பந்தமானது முடிவடைவதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மூன்றாண்டு ஒப்பந்தமொன்றில் சொல்க்ஜர் கைச்சாத்திட்டுள்ளார். அதில் இன்னொரு ஆண்டுத் தெரிவொன்றும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டு யுனைட்டெட்டின் முகாமையாளராக சொல்க்ஜர் பதவியேற்றிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .