2021 ஜூலை 27, செவ்வாய்க்கிழமை

ஆமிர் வேண்டாம்: ஹபீஸ், பீற்றர்சன்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 22 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பொட் பிக்சிங் குற்றத்தில் ஈடுபட்டமைக்காகத் தடை விதிக்கப்பட்டு, தனது தடைக்காலத்தைப் பூரணப்படுத்தியுள்ள பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஆமிர், மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் மொஹமட் ஹபீஸூம் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் கெவின் பீற்றர்சனுமே தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

பங்களாதேஷ் பிறீமியர் லீக் தொடரில், அணியொன்று சார்பாக விளையாடுவதற்குக் கிடைத்த வாய்ப்பை, அவ்வணி சார்பாக மொஹமட் ஆமிர் விளையாடுவதன் காரணமாக, மொஹமட் ஹபீஸ், நிராகரித்துள்ளார்.

பாகிஸ்தானின் நற்பெயரைக் கெடுத்த எவருடனும் இணைந்து விளையாட விரும்பவில்லை எனத் தெரிவித்த ஹபீஸ், இது, எந்தவொரு தனிநபருக்கும் எதிரானதல்லவெனவும், பாகிஸ்தான் அணி சார்பானது எனவும் தெரிவித்துள்ளார்.

ஹபீஸின் கருத்துத் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவர் மிஸ்பா உல் ஹக், அது ஹபீஸின் தனிப்பட்ட கருத்தெனத் தெரிவித்தார்.

இதேவேளை, தனது புதிய நூலில், ஆமிர் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்துள்ள கெவின் பீற்றர்சன், அமீரை சர்வதேச கிரிக்கெட்டில் மீள வரவேற்கக்கூடாது எனவும் ஸ்பொட் பிக்ஸிங்கில் அவரது பங்கெடுப்புக் காரணமாக, அவருக்கு கிரிக்கெட்டில் வாழ்நாள்த் தடை விதிக்கபடவேண்டும் என்று கூறியுள்ளார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .